ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம் - வரகூர்


 வரகூர் வேத பாடசாலை

Gopuram
          வரகூர் அக்ரஹாரத்தில் கிருஷ்ண யஜூர் வேத பாடசாலை ஒன்று எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு அத்யாபகரும், பன்னிரண்டு வித்யார்த்திகளும் யஜூர் வேதத்தில் தைத்ரிய சாகையைப் படித்து வருகிறார்கள்.வேதபாடசாலை ஸ்ரீ நாராயணதீர்த்தர் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. சென்ற வருடம் இரண்டு வித்யார்த்திகளுக்கு கிருஷ்ண யஜூர் வேதத்தில் ப்ராஹ்மணம் / சம்ஹிதை மற்றும் உபநிஷத் பாடங்கள் படித்து முடித்ததற்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

        பழமையானதும், பெயர்பெற்றதுமான இக் கோயில்களை மேலும் வெளியோர்க்கு அறிமுகப்படுத்தி எல்லோரும் ஸ்ரீ மஹா கைலாசநாதர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அருளை எப்பொழுதும் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் பரம்பரை டிரஸ்டிகள் பாடுபட்டு வருகிறார்கள். கோயில்கள் சிறிதாக இருந்தாலும் அவற்றிலுள்ள மூர்த்திகளின் கீர்த்தி எல்லைக்கடங்காதது. ஆகவே பக்தர்கள் எல்லோரும் வரகூருக்கு வந்து இங்குள்ள மூர்த்திகளை தரிசித்து தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

        திருக்கோயில் அலுவலகத்தில் தனித்தனியே கீழ்க்கண்ட மூன்று கட்டளை கணக்கு பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளது.அவைகள் முறையே.

   - உறியடி கட்டளை.
   - வேதபாராயண கட்டளை.
   - அன்னதான கட்டளை.

மேற்படி கட்டளைக்கு நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள் தங்கள் நன்கொடையை மணியார்டர் / டிமான்ட் டிராப்ட் / காசோலை மூலம்

   மானேஜிங் டிரஸ்டி,
   ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் / ஸ்ரீ மஹா கைலாசநாதர் கோவில்
   வரகூர் - 613101


      என்ற முகவரிக்கு அனுப்பலாம். நன்கொடை அளிப்பவர்களுக்கு ரசீது தபால்மூலம் அவர்களின் விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கோயில் அலுவலகத்தில் நேரில் பணமாகவும் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்

  உறியடியோ கோவிந்தோ....


  Click here to Read more about:  -