ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம் - வரகூர்


 வரகூர் ஸ்தல வரலாறு

Gopuram
          பல நூற்றாண்டுகளுக்கு முன், பூபதிராஜன் என்ற சோழ மன்னனின் ஆளுகையின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூபதிராஜபுரம் என்னும் ஒரு சிறிய கிராமம் இருந்தது. இயற்கை அழகும், பசுமையும் கூடிய இந்த கிராமம், குடமுருட்டி (காவிரி நதியின் கிளை) ஆற்றின் கரையில் அமைத்துள்ளது. இந்த கிராமத்தின் நுழைவாயிலில் காளந்தி நதி (கடுங்கால்) என்னும் ஒரு சிற்றாறும் ஓடுகிறது. இந்த கிராமத்தின் நடுவில் கிழக்கு நோக்கி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலும், வடக்குகோடியில் மேற்கு நோக்கி ம்ஹா கைலாசநாதர் சிவன் கோவிலும் உள்ளன.

         ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற மகான், ஒரு நதியை கடக்கும்போது வெள்ளத்தில் சிக்கி ஆபத்-சன்யாசம் ஏற்றுக்கொண்டு தெற்கு நோக்கி புறபட்டார். திருப்பதி, குணசீலம் முதலிய க்ஷேத்ரங்களை தரிசித்தவாரே குடமுருட்டி ஆற்றின் கரையோர கிராமங்களின் வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு தனது தீராத வயற்று வலி சற்று அதிகரிக்கவே, இறைவன் கனவில் கூறிய கட்டளையை ஏற்று ஒரு வெள்ளை வராஹத்தை (பன்றியை) தொடர்ந்தார். அந்த வராகம் குடமுருட்டி ஆற்றின் கரையோரத்தில் இருந்த பூபதிராஜபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலுள் புகுந்து மறைத்துவிட்டது. வராகம் வழிகாட்டியதால் அன்றிலிருந்து பூபதிராஜபுரம் என்ற ஊர் வரஹாபுரி என்று பெயர் மாறி பிறகு வரகூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

         ஸ்ரீ நாராயண தீர்த்தர், ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசித்து வழிபட்டார். தனது உடற்பிணி நீங்கியதை உணர்த்தார். இறைவனின் கருணையை பெற்று அவ்வூரிலேயே தங்கி தினமும் பெருமாளை ஆராதித்து மேலும் இறைவன் கட்டளையின்படி பெருமாள் சந்நிதியிலேயே பாகவதத்தில் உள்ள தசம ஸ்கந்த சாரமான ஸ்ரீ கிருஷ்ணா லீலா தரங்கிணி என்னும் நிகரற்ற சம்ஸ்கிருத காவியத்தை இயற்றினார். இவர் இந்த தரங்கினியின் கீதங்களை இயற்றி பாடும்பொழுது பெருமாள், திரைக்கு பின்னால் காலில் கஜ்ஜையுடன் கீர்த்தனங்களுக்கு ஏற்ப நடனமாடியதாகவும், அக்கோயிலில் அர்த்த மண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் தாளம் போட்டதாகவும் அதனால் அவருக்கு தாளம் கொட்டி ஆஞ்சநேயர் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லபடுகிறது.

 வரகூர் ஸ்தல வரலாற்றின் முக்கியச் சிறப்புக்கள்:

   - இறைவனால் வராஹ வடிவில் வழி காட்டப்பட்ட ஸ்தலம்.
   - ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற மகானுக்கு இறைதரிசனமும், முக்தியும் கிடைத்த ஸ்தலம்.
   - ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற மகா காவியம் உருவான ஸ்தலம்.
   - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளில் ஒன்றான சிக்யோஸ்தவம்.
      அதாவது உறியடி என்னும் மஹா உத்சவம் மிக சிறப்பாக கொண்டாடப்படும் ஸ்தலம்.
   - ஸ்ரீ கோபால பாகவதர் போன்று பல பாகவதர்களால் உருவாக்கப்பட்ட நல்ல
      சம்பிரதாயங்களை பின்பற்றி வரும் ஸ்தலம்.

   இவ்வளவு பெருமையும் சிறப்பும் வாய்ந்த வரகூர் ஸ்தலத்தில்,
   குடிகொண்டிருக்கும் ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபட்டு
   நம் பாபங்களை களைந்தெறிவோம்...


  உறியடியோ கோவிந்தோ....


  Click here to Read more about:  -